செல்ல பிராணி என்றாலே நமக்கு எடுத்த உடன் நியாபகம் வருவது நாய் மற்றும் பூனை தான். ஆனால் இப்போது பலர் பலவிதமான செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான இடங்களில் பூனை ஒரு முக்கிய செல்ல பிராணியாக வளர்க்கப்படுகின்றன. அந்த விதத்தில் இங்கு ஒரு பெண் வளர்த்த இருக்கும் பூனை பல விதமான தந்திரங்கள் செய்து கின்னஸ் சாதனை படைத்து இருக்கிறது.
ஆஸ்திரியா நாட்டில் அணிக்கா மோரிட்ஸ் என்ற பெண் அலெக்ஸியா என்ற பூனையை வளர்த்து வருகிறார். இந்த பூனையை 12 வாரம் குட்டியாக எடுத்து வளர்த்தார். அவர் கடந்த 8 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் பல விதமான தந்திரங்கள் கற்று கொடுத்து இருக்கிறார். தற்போது இந்த பூனைக்குட்டிக்கு எட்டு வயதாகி விட்டது. இப்போது பல சாதனைகளை படைத்து வருகிறது தன் தந்திரம் மூலமாக.
கிட்டத்தட்ட 26 வகையான தந்திரங்களை செய்து கின்னஸ் சாதனை படைத்து இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியில் சொல்லும் செயல்களில் ஈடுபட்டு தந்திரங்களை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த பூனை தற்போது உலக அளவில் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. இது பல தரப்பட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in