யூடியூப் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது சமையல்தான். யூடியூப் தொடங்க வேண்டும் என்றாலோ அல்லது யூடியூப்பை திறந்தாலோ எல்லாருக்கும் முதலில் வருவது சமையல்தான். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு, இல்லத்தரசிகளுக்கு. அதனால்தான் என்னவோ யூடியூப்பில் அத்தனை சமையல் சார்ந்த வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. சமைப்பது ஒரு கலை என்றால் அதை ரசித்து ருசித்து சாப்பிடுவது மற்றொரு கலை. ஒவ்வொரு ஊர்களாக சென்று அங்கு பிரபலமாக இருக்கும் ஓட்டலாக சென்று, அந்த உணவை ருசி பார்த்து Vlogs ஆக போடுபவர்தான் இர்ஃபான்.
உணவு உண்ணவே பிடிக்காதவர்கள் கூட இவர் வீடியோவை பார்த்த பின்பு பசி எடுக்கிறது என்று சொல்லும் அளவிற்கு நாக்கில் எச்சல் ஊற வைத்து விடுவார் இர்ஃபான்.ஒரு விழாவில் கமலஹாசன் கூட இர்ஃபானை பாராட்டி இருந்தார். அவரது வீடியோக்களை நான் ரசித்துப் பார்ப்பேன் எனக்கூறி இருந்தார். அந்த அளவுக்கு அனைவர் மத்தியிலும் பிரபலமானவர்தான் இர்ஃபான். இந்த நிலையில் இர்ஃபானுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் ஆகி இருந்தது. மிக கோலாகலமாக அந்த விழா நடந்து இருந்தது. அதை சோஷியல் மீடியா உள்ளிட்டவற்றில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வந்தனர்.
ஜனவரி மாதம் திருமணம் நடக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் திருமணம் நடைபெறவில்லை.
இதை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தனர். அதனால் இன்று ஒரு வீடியோவை அவர் வெளியட்டு இருந்தார்.அதில் நான் என்னுடைய திருமணத்தை நிறுத்தவட்டேன் என்றும். தனக்கும் அந்த பெண்ணிற்கும் ஒத்து வரவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். திருமணம் வேண்டாம் என்று வீட்டில் கூறியதாகவும், வீட்டில் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் பின்னர் மருத்துவரிடம் சென்று ஆலோசித்து பின்னர் நானே என் திருமணத்தை நிறுத்திவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். கவலை வேண்டாம் இர்ஃபான் உனக்கு பிடித்தபடி வேறோரு பெண்ணுடன் திருமணம் நடக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கமெண்ட்டில் ஆறுதல் கூறி வருகின்றனர். Watch the Below Video…
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in