சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தையை போல சினிமாவில் நடிக்காமல் 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் ஐஸ்வர்யா.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது.இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற திரை படத்தினை இயக்கினார்.
தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.இப்படத்திற்கு பிறகு இவர் குடும்ப வாழ்க்கையினை முழுவதுமாக கவனித்துக்கொண்டதால் படம் இயக்கவில்லை.சினிமாவில் இயக்கத்தில் நீண்ட இடைவெளியை இவர் விட்டார்.தற்போது முன்னாள் கணவர் தனுஷ் உடன் விவாகரத்து ஆன நிலையில் யோகா மற்றும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார்.அண்மையில் இவர் இயக்கிய ஆல்பம் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றது.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு லால் சலாம் என்ற புதிய படத்தினை இயக்க உள்ளார்.இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்,இவருடன் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர்.லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.இப்படத்தில் இருந்து ஐஸ்வர்யா உடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி விலகுவதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் மேலும் வருங்காலத்தில் போஸ்டர்களில் இருந்து தன்னுடைய பெயரை நீக்குமாறும் கேட்டுள்ளார்.இந்த பதிவு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Due to irrevocable differences in preproduction stage I will not be part of the project Lal Salaam….@ash_rajinikanth @LycaProductions
Just making a clear statement to remove my name from all posters in the future— Poornima Ramaswamy (@PoornimaRamasw1) January 21, 2023
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in