The Indian Times

ஐ.பி.எல் 2021 ரத்து! வீரர்கள் பலருக்கு கொரோனா தோற்று உறுதி.

ஐ.பி.எல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. சென்ற வருடம் உலகமே கொரோனா நோயை எதிரித்து போராடி கொண்டிருந்த நிலையில் கொரோன பாதிப்பின் காரணமாக தாமதமாக தான் ஐ.பி.எல் 2020 நடைபெற்றது. இதை தொடர்ந்து இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடர் ரசிகர்கள் யாருக்கும் அனுமதியில்லாமல் பல கட்டுப்பாடுகளுடன் நடந்து வந்தது.

Advertisement

இந்நிலையில் ஐ.பி.எல் players கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கபட்டு வருவதால். தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல் 2021 தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் கொரோனவால் பாதிப்படைந்தனர். இவர்களை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் chief executive officer காசி விஸ்வநாதன், bowling coach எல்.பாலாஜி , மற்றும் பஸ் கிளீனருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.

Advertisement

அந்த வரிசையில் மேலும் இரண்டு போட்டியாளருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த விரிதிமான் சஹா மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சேர்ந்த அமித் மிஷ்ரா கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஐ.பி.எல் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருவதால், தற்போது ஐ.பி.எல் 2021 தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர்.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL