நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.இந்த தேசிய விருது அளித்த உத்வேகத்தில் மீண்டும் அதேபோல் புதிய படத்தினை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார். மீண்டும் இவர் கதை எழுதி ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவருடன் வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்..இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மைக்கை தூக்கி பார்த்திபன் எறிந்தது இணையத்தில் பெரும் வைரலாகியது.தற்போது இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.சென்னையில் இப்படம் முதல் காட்சிகள் காலை 5 மணிக்கே திரையிடப்பட்டுள்ளது.சினிமா ரசிகர்கள் காலை 5 மணிக்கே சென்று முதல் காட்சியினை கண்டு களித்து வருகின்றனர்.
படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.படத்தினை பார்த்து வெளியே வந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் படம் பற்றி நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.படம் கொஞ்சம் மெதுவாக மட்டுமே நகர்கிறது மற்றபடி படம் சூப்பர் ,இயக்குனர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் வரம் என அவரை புகழ்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.மேலும் இது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது எங்கேயும் தெரியவில்லை சூப்பர்,இதுபோல நல்ல படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்
Embed video credits : TN360
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in