என் கோழி பிரியாணி மட்டும் தான் சாப்பிடும்.. Pet கோழியை பற்றி cute ஆக பேசும் இசைவாணி | Gaana IsaiVani

சாமானிய மக்களில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அதிலும் முதல் ஆளாக களம் இறங்கியவர் தான் இசைவாணி! கானா பாடல்கள் என்றால் ஆண்கள் தான் நினைவுக்கு வருவார்கள்! ஆனால் பெண்கள் கானா பாடல் பாடுதல் அரிதிலும் அரிது! அப்படி பெண் கானா பாடல் பாடுபவராக களமிறங்கி தனக்கென தனி இடம் சமூகத்தில் இடம்பிடித்தவர் தான் இசைவாணி என்றால் அது மிகையாகாது! பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக நுழைந்த இவருக்கு சாமானிய மக்களின் ஆதரவு அதிகமாக இருந்தது என்றே சொல்லலாம்! அதனால் தான் 47 நாட்களுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார்!

என் கோழி பிரியாணி மட்டும் தான் சாப்பிடும்.. Pet கோழியை பற்றி cute ஆக பேசும் இசைவாணி | Gaana IsaiVani 1

விளம்பரம்

ஆனாலும், பிக் பாஸ் விளையாட்டை பற்றி போதிய புரிதல் இல்லாததன் காரணமாகவே இவர் வெளியேற்றப்பட்டார் என்பது பொதுமக்களின் பொதுவான கருத்து! அதுமட்டுமில்லாமல் தேவையில்லாத இடத்தில் சண்டை போடு வீட்டில் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் சின்ன சின்ன விஷயத்துக்கும் மனக்கசப்பு ஏற்படும் போது இவரால் ஆட்டம் விறுவிறுப்பு இல்லாமல் போவது நிதர்சனமான உண்மை! அண்ணாச்சிக்கும் இசைவாணிக்கும் இருந்த மனக்கசப்புக்களை விட தாமரைக்கும் இசைவாணிக்கும் இருந்த மனக்கசப்புகளே அதிகம் என்று சொல்லலாம்! அதனால் தான் என்னவோ மக்கள் இவருக்கு வாக்குகள் குறைவாக அளித்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டனர்! Youtube video code embed credits: Crazy Pets Tamil

என் கோழி பிரியாணி மட்டும் தான் சாப்பிடும்.. Pet கோழியை பற்றி cute ஆக பேசும் இசைவாணி | Gaana IsaiVani 2

விளம்பரம்

பிக்பாஸ்க்கு பிறகு வெளியே வந்த இசைவாணி பல நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளில் பங்கேற்று பாடி வறுகிறார். தற்போது அவர் வீட்டில் வளர்க்கும் கோழி பற்றி ஒரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். 14 ரூபாய்க்கு கலர் கோழி குஞ்சாக வாங்கி தற்போது மிக பெரிய கோழியாக வளர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் வளர்க்கும் கோழிகள் பிரியாணி, தயிர் சாதம் போன்றவைகளை மட்டுமே சாப்பிடும் என்றும் அவர் கூறியுள்ளார். தான் வளர்க்கும் கோழிகள் பற்றி cute ஆக பேசும் இசைவாணியின் வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment