பிரபல ராப் பாடகி ஐக்கி பெரி.இவர் ஒரு மருத்துவர் பாடல் மேல் கொண்ட பற்றினால் தனது துறையை மாற்றி ராப் பாடகியாக உருவெடுத்தார்.இவர் ஆரம்பத்தில் பிரபல பின்னணி பாடகி NSK ரம்யாவிடம் பாட்டு பயிற்சி பெற்றார்.இவர் 2008 ஆம் ஆண்டு A. R. ரஹ்மானால் பிரேத்யகமாக இசைக்காக நிறுவப்பட்ட KM மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்து இசை கற்க தொடங்கினார்.முறையாக இசை கற்று பாடகராக சினிமாவில் வலம் வருகிறார் ஐக்கி பெர்ரி.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது அந்தளவு பிரபலமாகிவிட்டார் ஐக்கி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஐக்கி, நிறைய ராப் பாடல்கள் பாடல்கள் எழுதி பாடியும் உள்ளார்.அவர் பல பாடல்கள் பாடியும் வெளிச்சத்திற்கு வராத இவர் பிக் பாஸ் சீசன் 5ல் வாய்க்கு கிடைத்தது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் நிச்சயம் பிரபலம் ஆகிவிடலாம் என அனைவருக்கும் தெரிந்ததே அது ஐக்கிக்கு மட்டும் தெரியாதா என்ன ,நிகழ்ச்சியில் தைரிமையாக கலந்துகொண்டு பிரபலமாகினார். தனது எதார்த்தமான பேச்சினாலும் சுறுசுறுப்பான விளையாடினாலும் மக்களின் மனதினை கொள்ளையடித்தவர் இவர்.நீண்ட நாட்களாக வீட்டில் இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெளியேறினார்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு ஐக்கிக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் தனது நடனத்திறமையை மக்களுக்கு காண்பித்து வருகிறார்.நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் நடனத்தில் வெளுத்துவாங்கி நடுவர் ரம்யாகிருஷ்ணனிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார் இவர்.இவர் அடிக்கடி நடனம் ஆடி அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்,இவரது வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது ஜோடிகள் நிகழ்ச்சி செட்டில் கேமிராவுடன் கொஞ்சி விளையாண்டு அதனை வீடியோவாக பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.பலரும் இவர் குழந்தை போல் விளையாடுவதை பார்த்து ரசித்து வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in