The Indian Times

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் மூளைசாவு? மருத்துவமனைக்கு விரைந்த விஜய் சேதுபதி !

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே தன வெற்றி தடத்தை பதித்து தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கிய முதல் படமான இயற்கை மிக பெரிய வெற்றி அடைந்து தேசிய விருதை இவருக்கு பெற்று தந்தது. அதை தொடர்ந்து நடிகர் ஜீவா மற்றும் நடிகை நயன்தாரா நடித்த ஈ , நடிகர் ஜெயம் ரவியின் பேராண்மை , நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய திரைப்படங்களை ஜனநாதன் இயக்கி உள்ளார்.

Advertisement

இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வித்தியாசமான கதைக்களத்துடன் மிக பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. இவர் இயக்கி அந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இவரது படம் பெரும் புகழையும் பெற்று தந்துள்ளது. இந்நிலையில் தற்போது இவர் இயக்கியுள்ள படம் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த லாபம் திரைப்படம். இந்த படத்தின் பட பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement

ஜனநாதனிற்கு திருமணம் ஆகாத காரணத்தினால் அவர் தன் உதவி இயக்குனருடன் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி சாப்பிட்டு வருவதாக கூறி வீட்டிற்கு சென்றுள்ளார் ஜெகநாதன். அவர் வருவதற்கு நீண்ட நேரம் ஆனதால் அங்குள்ள உதவி இயக்குனர் ஒருவர் அவருக்கு தொடர்பு கொள்ள நினைத்திருக்கிறார். தன் அழைப்பை நீண்ட நேரமாக எடுக்காத காரணத்தினால் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் மயங்கிய நிலையில் தரையில் விழுந்திருப்பதை கந்ததும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதை அறிந்த விஜய் சேதுபதி , இயக்குனர் அமீர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கு மருத்துவரிடம் அவர் உடல் நிலை குறித்து விசாரித்ததற்கு ,மருத்துவர் அவர் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது நரம்பியல் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள், இருந்தாலும் அவரது உடலில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்று கூறியுள்ளார். எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in