இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ஜப்பான்,இது இவரின் 25வது படம் ஆகும்.படத்தில் கதாநாயகியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்,மேலும் இப்படத்தில் இவருடன் சுனில்,விஜய் மில்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.இப்படத்தின் விமர்சனத்தை கீழே காண்போம்.
படத்தின் கதை…
கொள்ளை அடிப்பதில் மிக பிரபலமானவர் கதாநாயகன் ஜப்பான்(கார்த்தி). இந்நிலையில் பிரபல நகை கடை ஒன்றில் 200கோடி மதிப்பிலான தங்க நகை திருடு போய்விடுகிறது.இதனை திருடியது கார்த்தி என போலீசார் சந்தேகப்பட்டு கார்த்தியை தேடி அலைகின்றனர்,இறுதியாக கார்த்தியை கண்டுபிடிக்கவே இதனை செய்தது தான் இல்லை தன்னை மாட்டிவிட இன்னொருவன் இதை செய்து உள்ளான் என கூறுகிறார் கார்த்தி,யார் செய்தார்,இவரை விட பெரிய திருடன் யார்,இதிலிருந்து கார்த்தி எப்படி தப்பிக்கிறார் என்பதே மீதி படத்தின் கதை
படத்தின் விமர்சனம்
படத்தில் கதாநாயகன் கார்த்தி தனது நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்,கதாநாயகியாக வரும் அணு இம்மானுவேல் ஏன் வருகிறார் என அவருக்கும் தெரிவதில்லை நமக்கும் தெரிவதில்லை,அனைவரும் அவர்களுக்கான கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளனர்.அழுத்தமான திரைக்கதை இல்லாதது படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம்,ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஓட ஆரம்பித்த படம் நேரம் ஆக ஆக இழுக்க தொடங்கிவிட்டது,ஜிவி இசையில் படத்தின் பாடல்கள் ஏதும் படத்திற்கு கை கொடுக்கவில்லை,கதாபாத்திரங்கள் வடிவமைப்புக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்பது போல உணரவைக்கின்றது படம்.
ஜப்பான் படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in