காதல் மனைவிக்கு கல்யாண நாள் வாழ்த்தை வித்தியாசமாக கூறிய ஜெயம் ரவி…

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.சில தோல்விகளை இடையில் கண்டாலும் தோல்விகளை வெற்றிகளாக மாற்ற கடும் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டவர்.தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து மக்களை கவர்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காதல் மனைவிக்கு கல்யாண நாள் வாழ்த்தை வித்தியாசமாக கூறிய ஜெயம் ரவி... 1

விளம்பரம்

வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்தார்.இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.

காதல் மனைவிக்கு கல்யாண நாள் வாழ்த்தை வித்தியாசமாக கூறிய ஜெயம் ரவி... 2

விளம்பரம்

தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தின் பிசியாக நடித்து வருகிறார்.இவர் தனது மனைவி ஆர்த்தியை எப்படி காதலிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தினை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருவார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றன.இந்நிலையில் இன்று ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினர் தங்களது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.ஜெயம் ரவி மனைவியுடன் எடுத்த புகைப்படத்தினை வீடியோவாக மாற்றி அதில் காதல் வசனங்களை எழுத்து பதிவேற்றி அனைவரையும் அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment