விக்னேஷ் சிவன் படத்தில் ஹீரோயின் ஆகிறார் ஜொனிதா..வெளியான சூப்பர் அறிவிப்பு | Jonitha Gandhi

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

ஜொனிதா காந்தி இந்த பெயரை கூகிளில் சமீப காலங்களில் தேடாத ஆளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வைரலான ஆளாக உள்ளார் ஜொனிதா. மே 23 அக்டோபர் 1989 புது டெல்லியில் பிறந்த இவர் 7 வயதாக இருக்கும்போது அவரது அப்பாவுடன் கனடாவிற்கு சென்றார். அவரது தந்தை ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் என்பதால் கனடாவிற்கு செல்லும் சூழ்நிலை உருவானது. வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்த ஜொனிதா, பாடுவதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தார். மேற்கத்திய பாரம்பரிய இசையில் மட்டுமன்றி, இந்துஸ்தானி இசையிலும் அவர் எடுத்து வந்த பயிற்சி அவரது இசை வாழ்க்கையைத் தொடங்க பேருதவி புரிந்தது. மேலும் அவர் ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
DOCTOR Metro Fight Scene Making Video | Sivakarthikeyan | Nelson

விக்னேஷ் சிவன் படத்தில் ஹீரோயின் ஆகிறார் ஜொனிதா..வெளியான சூப்பர் அறிவிப்பு | Jonitha Gandhi 1

விளம்பரம்

ஜொனிதா காந்தி 17 வயதில் தான் பாடிய வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றினார். அதுவே அவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பை கொடுத்தது. சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் பாடினார். அங்கிருந்துதான் அவரது திரையுலகப் பயணம் ஆரம்பமானது. தொடர்ச்சியாகப் பல திரைப்படங்களில் பாடிய ஜொனிதா, ஏ.ஆர்.ரகுமானுடன் ஓர் இந்தித் திரைப்படத்தில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பை அடுத்து, தமிழ்த் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார். மணி ரத்னம் இயக்கிய ஓகே கண்மணி அவரது முதலாவது தமிழ்ப்பாடல் இடம்பெற்ற திரைப்படமாக அமைந்தது. மெண்டல் மனதில் என்ற பாடல் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

கட்டாயம் படிக்கவும்
Thalivar 170 படம் பற்றி வெளியான புது தகவல்.. டைரக்டர் யாருனு தெரியுமா? | Thalaivar 170 | Rajinikanth

விக்னேஷ் சிவன் படத்தில் ஹீரோயின் ஆகிறார் ஜொனிதா..வெளியான சூப்பர் அறிவிப்பு | Jonitha Gandhi 2

விளம்பரம்

பிறகு வேலைக்காரன் படத்தில் இறைவா என தொடங்கும் பாடலையும், டாக்டர் படத்தில் செல்லமா என்ற பாடலையும் பாடினார். தற்போது வெளியாகியுள்ள அரபிக் குத்து பாடலில் அவர் தோன்றி பாடியதன் மூலம் பல ரசிகர்களை தேடி கொண்டார். பலரும் அவரை ஹீரோயின் ஆக வர வேண்டும் என்று தங்களது ஆவலை வெளிப்படுத்தினர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் அவர் ஹீரோயின் ஆக கையெழுத்து ஆகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இவருக்கு ஹீரோவாக சூரரை போற்று படத்தில் சூர்யாவின் நண்பனாக வரும் பைலட் கிருஷ்ணகுமார் நடிக்கிறார் .அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

கட்டாயம் படிக்கவும்
தலைவி படத்தின் "உனக்கான உலகம்" Video Song | Kangana Ranaut | Arvind Swamy

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment