1982 ஆம் ஆண்டு வெளியாகிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர் லிவிங்ஸ்டன்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்,இவர் நடித்த பல படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையும் பெற்று கொடுத்தது.தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.கதாநாயகனாக ,நகைச்சுவை நடிகராக சினிமாவையே கலக்கியவர் லிவிங்ஸ்டன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவருக்கு ஜோவிதா, ஜெம்மா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பூவே உனக்காக’ என்ற தொடரில் கதாநாயகி பூவரசி என்ற கேரக்டருக்கு தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் உயர்படிப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.பின்னர் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அருவி நாடகத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு இந்த நாடகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் தொடர்ந்து நாடகத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்
மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வருகிறார்.இவர் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போது இவர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ஜோவிதாவின் நடனத்தினை ரசிகர்கள் பெருமளவு விமர்சையாக வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.அந்தளவிற்கு நடனத்தின் மூலம் ரசிகர்களை சேர்த்துள்ளார்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in