கன்னட சினிமாவும் தற்போது தரமான படங்களை இயக்கி மக்களை மகிழ்விக்க தொடங்கியுள்ளது.அதற்கு முதல்படியாக கேஜிஎப் வெற்றி ஆனது சாதகமாக அமைந்தது.கேஜிஎப் படம் கன்னட சினிமாவை அடுத்தகத்திற்கு தூக்கி சென்றது.இப்படம் இரண்டு பாகங்களாக வந்து மாபெரும் வரவேற்பினை உலகம் முழுவதும் பெற்று கன்னட சினிமாவின் மீது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.இந்நிலையில் கேஜிஎப் படத்திற்கு அடுத்ததாக வந்த காந்தாரா படமும் மாபெரும் வெற்றியினை பெற்று கன்னட சினிமாவின் தரத்தினை உயர்த்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் கேஜிஎப் படத்தை போல சிறந்த படத்தை இயக்க வேண்டும் என எண்ணி இயக்குனர் ஆர் சந்துரு நடிகர் உபேந்திராவை வைத்து கப்ஸா படத்தினை இயக்கியுள்ளார்.மேலும் இப்படத்தில் கிச்சா சுதீப்,சிவராஜ் குமார்,ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ளனர்.பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் படம் இது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.படம் கேஜிஎப் லெவெலுக்கு கலக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இப்படத்தினை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.வீடியோவில் கேஜிஎப் படம் போல எடுக்குறேன்னு சொல்லிட்டு அத கேலி பண்ணி எடுத்து வச்சிருக்காங்க.கன்னட சினிமாவுல இருக்குற வயசானவங்க சேர்ந்து கேஜிஎப் எடுக்குறேன்னு என்னத்தையோ எடுத்து வச்சிருக்காங்க.கன்னட சினிமாவை 500 வருஷம் பின்னுக்கு தள்ளிடுவாங்க போலயே.நம்மல கொலையா கொண்டெடுத்துட்டாங்க என கிழித்தெடுத்துள்ளார்.
Embed video credits : TAMIL TALKIES
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in