நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விக்ரம்.கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆன ராஜ்கமல் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது.படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் உலகநாயகன் உடன் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.தமிழகத்தில் இப்படத்தின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
நிகழ்ச்சி மேடையில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி,கமல்ஹாசன் சாரை மிரட்டி தானே இந்த படத்தினை வாங்குனீங்க என்று கேட்டார்கள்,கமல்ஹாசன் சாரை யாரும் மிரட்ட முடியாது மிரட்டினால் அவர் பயப்படவும் மாட்டார்,அவரது ரசிகனாக தான் இந்த படத்தினை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இதன்பின்னர் பேசிய நடிகர் கமல் இதுகுறித்து விளக்கம் அளித்ததாவது,உதயநிதி எனக்கு போன் செய்து படத்தை வெளியிடவேண்டும் என்று கேட்டார்,அரசியல் வேறு இது வேறு என்று கூறினேன் அதற்கு அவர் உங்கள் ரசிகனாக படத்தினை வெளியிட விரும்புகிறேன் என அவர் கூறினார்.
தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்தவை அதனை பிரிக்கவே முடியாது என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எனக்கு அரசியலை தாண்டி பெரிய நண்பர் ,நானும் ரஜினியும் தொழிலில் போட்டி போட்டுக்கொண்டாலும் எப்படி நண்பர்களாக இருக்கிறோம் அதேபோல் தான் இதுவும் என கூறியுள்ளார்.மேலும் எனக்கு தமிழின் மேல் ஏற்பட்டுள்ள காதலுக்கு கலைஞரும் ஒரு காரணம் ,தற்போது உதயநிதியும் என்னுடன் அரசியல் மற்றும் சினிமாவில் இருக்கிறார்.தாத்தா முதல் பேரன் வரை எனக்கு நட்பு உருவாகியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Embed video credits :NewsTamil 24X7
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in