இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் விக்ரம்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.படத்தினை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.அனிருத் இசையமைத்துள்ளார்.சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என பல முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர்.படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி கமல்ஹாசன் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் கனவை நிறைவேற்றியுள்ளது.படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் சமீப காலமாக தோல்விப்படங்களை கொடுத்து சரிந்து கிடந்த தமிழ் சினிமாவை கமல் மீண்டும் தூக்கி நிறுத்தியுள்ளார் என்று கூறி வருகின்றனர்.
படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு கார்,துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக அளித்தார் கமல்ஹாசன்.அதேபோல் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவிற்கு தனது 46 லட்ச ரூபாய் மதிப்பிலான ரோலக்ஸ் வாட்சினை பரிசாக அளித்துள்ளார்.படத்தின் வெற்றியினை கதாநாயகனாகவும் படத்தின் தயாரிப்பாளராகவும் கொண்டாடி வருகிறார் கமல்ஹாசன் இந்நிலையில் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் இணைந்து கமல்ஹாசன் இன்று கொண்டாடியுள்ளார்.இதில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவரிடம் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடிப்பீர்களாக என கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது,”நான் எப்போதும் ரஜினியுடன் இணைந்து நடிக்க தயார், அது லோகேஷ் படத்தில் நடக்குமா என்பதை லோகேஷும், ரஜினியும் தான் முடிவு செய்யவேண்டும் என கூறியுள்ளார் இவரின் இந்த பேச்சினால் கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்த கூட்டணியில் படம் வந்து பல ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது இதே கூட்டணியில் படம் வந்தால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் கடல் போல காட்சியளிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.விரைவில் இந்த கூட்டணியை எதிர்பார்க்கலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in