கர்ணன் திரைப்பட டீஸர் வெளியாகும் நேரம் அறிவுப்பு!

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பரியேறும் பெருமாளின் மெகா வெற்றியை தொடர்ந்து காரணன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். தனுஷ் மாஸாக நடிக்கும் படத்தை விட அசுரன் போன்ற கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்களை மக்கள் இன்னும் விரும்புகிறார்கள்.அசுரனின் அசுர வெற்றிக்கு பிறகு தனுஷ் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
சார் உண்மையைத்தான் சொல்லுறீங்களா?என் வீட்டு கிச்சன்ல இந்த பாட்டு தான் கேட்டுக்கிட்டே இருக்கும் :தெலுங்கு நடிகர் ராம் சரண்

கர்ணன் திரைப்பட டீஸர் வெளியாகும் நேரம் அறிவுப்பு! 1

விளம்பரம்

இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் 3 பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிலும் கண்டா வர சொல்லுங்க பாடலை ஸ்டேட்டஸ் வைக்காத ஆட்களே இருக்க முடியாது. அதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான தட்டான் தட்டான் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் பாட ரசிகர்களை பெரியளவில் கவர்ந்திழுத்தது. அதையும் தாண்டி தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருப்பது கர்ணன் படத்தின் டீசர் வெளியீட்டிற்காக தான்.

கட்டாயம் படிக்கவும்
வாத்தி கம்மிங் பாடல் செய்த மாஸ் சாதனை - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

கர்ணன் திரைப்பட டீஸர் வெளியாகும் நேரம் அறிவுப்பு! 2

விளம்பரம்

தற்போது இந்த படத்தின் டீசர் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. கர்ணனின் புறப்பாடு என்ற தலைப்போடு இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
Venom 2 படத்தின் மிரட்டலான official tamil trailer

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment