தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.ஆரம்ப கட்டத்தில் சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்,இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் மேலும் இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக உள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இறுதியில் திருமணமும் செய்துகொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா குழந்தைகள் குடும்பம் என இல்லறவாழ்கையை கவனிக்க தொடங்கிவிட்டார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்து படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.மேலும் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தையும் ஜோதிகா தான் பார்த்து கொள்கிறார்.அண்மையில் சிறந்த தயாரிப்பாளர் என சூரரைப்போற்று படத்திற்கு விருதினை பெற்றிருந்தார் ஜோதிகா.
தற்போது ஜோதிகா மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது,டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : Mammootty Kampany
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in