சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதேபோல் தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.தற்போது இவருக்கு அடுத்ததாக தசரா மற்றும் ரிவால்வர் ரீட்டா படங்கள் வெளியாக உள்ளது
தற்போதய கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.இப்படி இருந்த கீர்த்தியா இப்படி ஆகிட்டாங்க செம்ம சூப்பர் என கூறி நீங்க எப்போதுமே கியூட் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது. புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in