வைரலான புகைப்படங்களில் வந்த சர்ச்சை – பதிலடி குடுத்த புதுமண தம்பதி

கேரளாவை சேர்ந்த புதுமண தம்பதியினர் ஹிருஷி கார்த்திகேயன் – லட்சுமி, இவர்கள் இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி கொரோனா ஊரடங்கில் ஊரடங்கு காலத்தில் திருமணம் செய்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக ப்ரீ வெட்டிங் போட்டோசூட் நடத்த முடியாமல் போனதால், தற்போது போஸ்ட் வெட்டிங் போட்டோசூட் நடத்தி தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

வைரலான புகைப்படங்களில் வந்த சர்ச்சை - பதிலடி குடுத்த புதுமண தம்பதி 1

விளம்பரம்

அந்த புகைப்படங்களில்  மணப்பெண் உடலில் வெள்ளை போர்வைபோல் மெலிதான உடையை அணிந்துகொண்டு மலைபிரேதசங்களில் கணவருடன் ஓடியாடும் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

வைரலான புகைப்படங்களில் வந்த சர்ச்சை - பதிலடி குடுத்த புதுமண தம்பதி 2

விளம்பரம்

இந்நிலையில் தங்கள் தரப்பு விளக்கத்தை தந்துள்ள அந்த தம்பதிகள், “பெரும்பாலானவர்கள் வேஷ்டி- சட்டை மற்றும் சேலையுடன் கோவிலை சுற்றி வந்து போட்டோ ஷூட் நடத்துவார்கள். சற்று வித்தியாசமாக எடுக்க நினைத்து இப்படியொரு போட்டோ ஷூட் நடத்தினோம். நாங்கள் ஆடை அணிந்துகொண்டுதான் போட்டோஷூட் செய்தோம். எப்படி ஆடை அணியாமல் வாகமன் போன்ற சுற்றுலா தளத்தில் போட்டோ ஷூட் செய்யமுடியும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

வைரலான புகைப்படங்களில் வந்த சர்ச்சை - பதிலடி குடுத்த புதுமண தம்பதி 3

விளம்பரம்

“இது முழுக்க எங்கள் புகைப்படக்காரரின் அழகியல் மற்றும் படைப்பாற்றல் திறமை சார்ந்தது. இது தெரியாமல், பேஸ்புக்கில் பலர் என்னையும் என் மனைவியையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். ஒரு சிலர் பாராட்டினாலும் பெரும்பாலும் மோசமான கமெண்டுகளே வந்தன, ஆனால் எங்கள் வீட்டில் இந்த போட்டோ ஷூட் பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால், மனைவி லட்சுமியின் வீட்டில் வருத்தப்பட்டார்கள்” என்கிறார் கார்த்திகேயன்.

வைரலான புகைப்படங்களில் வந்த சர்ச்சை - பதிலடி குடுத்த புதுமண தம்பதி 4

விளம்பரம்

புதுப்பெண்ணான லட்சுமி கூறுகையில், “ஒரு பெண் கழுத்து மற்றும் கால்கள் தெரியும்படி உடை அணிந்திருந்தால் அது நிர்வாணம் கிடையாது. சமூகவலைத்தளங்களை தாண்டி, தூரத்து உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்கள் பெற்றோர்களிடம் புகாரளிக்க தொடங்கியதையும், நான்கு சுவற்றுக்குள் செய்ய வேண்டியதை இப்படியா பொதுவெளியில் காட்டுவது? என விமர்சிக்கத் தொடங்கிவிட்டதையும் குறிப்பிட்டுள்ளார் லட்சுமி”.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment