தி கேரளா ஸ்டோரி – திரைவிமர்சனம்

இன்று உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையுடன் வெளியாகி இருக்கும் படம் கேரளா ஸ்டோரி.இப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.மேலும் தவறாக சித்தரிக்கும் இந்த படத்தை தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.இப்படத்தினை இயக்குனர் சுதிப்டோ சென் என்பவர் இயக்கியுள்ளார்.இப்படத்தில் ஆதா சர்மா,யோகிதா,சித்தி இதானி ,விஜய் ஷர்மா என சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.அப்படி இப்படத்தில் என்ன இருக்கிறது எதற்காக இவ்வளவு சர்ச்சை படத்தின் கதை தான் என்ன என்பதை கீழே விமர்சனத்தில் காண்போம்

தி கேரளா ஸ்டோரி - திரைவிமர்சனம் 1

விளம்பரம்

படத்தின் கதை :

படத்தில் ஷாலினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதா ஷர்மா,இவர் ஒரு ஐஎஸ் தீவிரவாதி,ஒருகட்டத்தில் போலீசிடம் மாட்டிக்கொள்கிறார் ஷாலினி.பின்னர் நடந்த கதைகளை எடுத்துகூறவே அங்கிருந்து கதை ஆரம்பிக்கிறது.ஷாலினி ஐயர் வீட்டு பெண் அவர் நர்சிங் படிக்க ஆசைப்பட்டு காசர்கோடு பகுதியில் உள்ள கல்லூரியில் சேருகிறார்.அங்கு இவருடன் ஹாஸ்டலில் நடிகை சித்தி இத்னானி, ஒரு கிறிஸ்துவ பெண் மற்றும் ஒரு முஸ்லிம் பெண் ஆகியோர் ,தங்குகின்றனர்.அதில் முஸ்லீம் பெண் ஐஎஸ் தீவிரவாதி ஆள் என்பதால் பிற பெண்களையும் மூளைச்சலவை செய்து முஸ்லிமாக மாற்றுகிறார்.பர்தா அணிந்தால் பாலியல் பலாத்காரம் நடக்காது என கூறி அப்பெண்களை முஸ்லிமாக மாற்றுகிறார்.மேலும் இஸ்லாமிய இளைஞர்கள் இவர்களை காதலித்து கர்ப்பமாக்கி விடுவது போல செய்கின்றனர்.பின்னர் கதாநாயகி அதா சர்மா கணவருடன் சீரிய செல்லவே ,அப்பொழுதுதான் பெண்களை மதம் மாற்றி தீவிரவாதிகளாகவும்,பாலியல் வேலை செய்பவர்களாகவும் மாற்றுவதை கண்டறிகிறார் அதா,பின்னர் அங்கிருந்து தப்பிக்க முயல்கிறார் ,இவர் தப்பித்தாரா இல்லையா என்பது தான் மீதி படத்தின் கதை

விளம்பரம்

தி கேரளா ஸ்டோரி - திரைவிமர்சனம் 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

32ஆயிரம் பெண்கள் கேரளாவில் இருந்து மதம் மாற்றம் செய்யப்பட்டு இவ்வாறு அனுப்பியுள்ளதாக இப்படத்தில் காட்டுகின்றனர்.படத்தில் வரும் கதாபாத்திரத்தில் எந்த ஒரு அழுத்தமும் இல்லை,அதனுடன் ஒன்றி பார்ப்பது மிகவும் கஷ்டமான காரியமாக அமைந்துள்ளது.முஸ்லிம்களை தவறாக மட்டுமே இப்படத்தில் சித்தரிப்பது வேதனை அளித்தாலும் இதனாலயே படம் சரியாக அமையவில்லை என தோன்றுகிறது.இந்த கதைக்கு பதிலாக வேறு நல்ல கதையை நல்லவிதமாக எடுத்திருந்தால் இப்படம் இன்னும் நன்றாக அமைந்திருக்கலாம்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment