கேஜிஎப் படத்தின் மூலம் கன்னட சினிமா மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் யாஷ்.2018 ஆம் ஆண்டு வெளியாகிய இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.இப்படம் கொரோனா நிலவரத்தினால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தள்ளி சென்ற நிலையில் இறுதியாக ஏப்ரல் 14 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகியது.ராக்கி பாயின் குழந்தையின் குறும்புதனம் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
5 மொழிகளில் வெளியாகிய இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.இப்படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகியுள்ள நடிகர் யாஷ் தற்போது உள்ள நேரத்தினை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.யாஷ்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.யாஷ் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவரது மகள் அயரா தனது தந்தையை சலாம் ராக்கி பாய் பாடலை பாடி எழுப்பியுள்ளார்.இவர் பாடிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் குழந்தையின் இந்த குறும்பு தனத்தினை கண்டு மகிழ்ந்துள்ளனர்.மேலும் சிலர் ராக்கி பாயவே கலாய்ச்சிட்டியே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in