தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைவருக்கும் நடிகராக இருந்தவர் நடிகர் கிங் காங். இவரது பெயர் ஷங்கர் , அனால் இவரை அனைவரும் கிங் காங் என்ற செல்ல பெயரில் தான் அழைப்பார்கள். மக்கள் பலருக்கு இவரை கிங் காங் என்றால் தான் தெரியும் , இவரது பெயர் ஷங்கர் என்று பலருக்கு தெரியாது.
காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி , வடிவேலு ஆகியோரோடு பல படங்களில் நடித்துள்ளார் கிங் காங். அதுமட்டுமில்லாது சூப்பர் ஸ்டார் ரஜினி , விஜய் என பல உச்ச நட்சத்திரங்களோடும் நடித்துள்ளார். இவர் ஒரு காமெடி நடிகர் மட்டுமல்ல குணச்சித்திர நடிகரும் கூட. சமீப காலமாக தமிழ் சினிமாவில் இவர் தென்படவில்லை என்றாலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
அதிலும் வா அருகில் வா படத்தில் பொம்மையாக நடித்து அசத்தியது மறக்க முடியாத ஒன்று என்றே கூறலாம். இவர் ஆள் பார்க்க குள்ளமாக இருந்தாலும் , அதை ப்ளஸ் ஆக மாற்றிக்கொண்டு தமிழ் சினிமாவில் நடித்து மக்களை சிரிக்க வைத்தவர் இவர். இந்நிலையில் தற்போது இவரது மகனை வெளிக்காட்டியுள்ளார் கிங் காங்.
நேற்று அவரது மகன் துரைமுருகனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கிங் காங். இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று பலரும் ஆச்சரிப்படும் வகையில் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in