1980,1990 களில் பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வந்தவர் இயக்குனர் SA சந்திரசேகர்.இவர் 1981 ஆம் ஆண்டு விஜய்காந்த்தினை வைத்து சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தசத்தினை அடைந்தார் இவர்.இப்படதினை தொடர்ந்து பல தமிழ் படங்களை இயக்கினார் மேலும் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ஒரு படத்தினை இயக்கியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்.இவருக்கு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை.பெண் குழந்தை சிறுவயதிலேயே இறந்தது.அந்த சோகத்தில் இருந்து இவர்கள் குடும்பம் மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆகியது.சரி பையனையாவது பெரிய ஆள் ஆக்க வேண்டும் என போராடினார் சந்திரசேகர்.சினிமா உலகிற்கு ஆண் குழந்தையை மட்டும் அறிமுகப்படுத்தி இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகராக உருவாக்கியுள்ளார் SA சந்திரசேகர்.இவர் வேறுயாருமில்லை தளபதி விஜய் தான்.அப்பாவாக அவர் கூடவே இருந்து சினிமாவில் நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து அவரை இந்த அளவு வளர்த்துள்ளார்.
தற்போது இவர் சீரியலில் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார்,இந்த தொடருக்கு கிழக்கு வாசல் என பெயரிடப்பட்டுள்ளது.தற்போது இந்த தொடரின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed Video Credits – VIJAY TELEVISION
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in