90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் குஷ்பு. 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.
பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து விலகினார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.இப்படி சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில் நடிகை குஷ்பு தனது கல்யாண நாளை முன்னிட்டு சுந்தர் சி உடன் காதலிக்கும் பொழுது காதலித்த பிறகு,திருமணம் மற்றும் குழந்தைகள் என நான்கு விதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Our life in 4 pics. From then to now, nothing has changed. Thank you for always being with me. To love, to fight, to chide, to reprimand, above all to understand me & love me just as I am. To accept me for what I am. Happy 23rd anniversary.Being married to you is a blessing. ❤️ pic.twitter.com/hGXDBan2j1
— KhushbuSundar (@khushsundar) March 8, 2023
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in