Election நேரத்தில் பெரிய தனியார் சேனல்களும் மக்களிடம் கருத்து கணிப்பு எடுப்பது வழக்கம் தான் . அந்த வகையில் ஒரு பிரபல தனியார் சேனல் கருத்து கணிப்பு நடத்த மக்களிடையே கேள்விகள் கேட்ட போது , அங்கிருந்த கூலி தொழிலாளி ஒரு ஆங்கிலத்தில் பேசி செய்தியாளரை தடுமாற வைத்தார். அந்த செய்தியாளர் , அடுத்து யார் ஆட்சியை பிடிப்பார்கள்? இன்றைய நிலைமை எப்படி இருக்கு என்று ஹிந்தியில் கேட்க அதற்க்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசி பதிலளித்தார் அந்த கூலி தொழிலாளி.
ஒரு கூலி தொழிலாளி இந்தளவிற்கு ஆங்கிலத்தை தடுமாற்றம் இல்லாமல் பேசுவதை கண்டு அங்கிருந்த மக்கள் வியந்து பார்த்தனர். முந்தைய காலத்தில் படித்தால் மட்டுமே வேலை படிக்கவில்லை என்றால் மாடு மேய்க்க தான் செல்ல வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் கூட கூலி தொழில் , மாடு மேய்ப்பது போன்ற வேலை பார்த்துக்கொண்டிருப்பதை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது. இருப்பினும் அந்த கூலி தொழிலாளியின் ஆங்கில புலமையை கண்டு அங்கிருந்த மக்கள் அவரை ஆரவாரமாக கைதட்டி பாராட்டினர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in