இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள திரைப்படம் லத்தி.இப்படத்தினை நடிகர் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலரில் வந்த சண்டை காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகமாக்கியது.இந்த எதிர்பார்ப்பினை லத்தி படம் பூர்த்தி செய்ததா என்பதை முழு விமர்சனத்தில் கீழே காணலாம்.
படத்தின் கதை :
படத்தில் கான்ஸ்டபிள் முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் விஷால்.இவர் மனைவியாக சுனைனா நடித்துள்ளார்.இவருக்கு ஒரு பையனும் உள்ளார்.விஷால் காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் பொழுது பெண் ஒருவர் தன்னை ஒருவன் தொந்தரவு செய்வதாக கூறுகிறார்,அந்த புகாரை ஏற்று அந்த பையன் வீட்டில் சென்று விஷால் எச்சரித்து வருகிறார்.இந்நிலையில் புகார் கொடுத்த மறுநாளே அப்பெண்ணை கற்பழித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதனை அந்த பையன் தான் செய்திருக்க வேண்டும் என எண்ணி விஷால் அந்த பையனை கைது செய்து சிறையில் வைத்து அடித்து உண்மையை வாங்க முயற்சி செய்கிறார்,இதற்கிடையில் தன்னை கெடுத்தவன் குறித்து அடையாளம் கூறிவிட்டு அப்பெண் இறந்தது விடுகிறார்.பெண் கூறிய அடையாளங்க இந்த பையனிடம் ஒற்றுப்போகாததால் தவறான ஆளை கைது செய்ததாக கூறி விஷாலை ஒரு வருடம் பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.ஆனால் உயர் அதிகாரியாக வரும் பிரபுவின் மூலம் 6 மாதத்திலேயே பணியில் மீண்டும் சேர்ந்து விடுகிறார் விஷால்.இந்நிலையில் பிரபுவின் மகளை பிரபல தாதா சுறாவின் மகன் வெள்ளை என்பவன் கிண்டல் செய்கிறான்,இதனால் கடுப்பாகிய பிரபு வெள்ளையை கடத்தி தனி இடத்திற்கு அழைத்து சென்று விஷாலை வைத்து லத்தி அடி கொடுக்க சொல்கிறார்.விஷால் அடிக்கும் பொழுது அவரின் முகத்தினை வெள்ளை பார்த்து விடுகிறான், பின்னர் விஷால் குடும்பத்தையும் கண்டுபிடிக்கிறான்,இறுதியில் வெள்ளையை விஷால் எப்படி சமாளித்தார்,பெண்ணை கெடுத்து கொன்ற குற்றவாளி யார்,அதனை விஷால் கண்டுபிடித்தாரா என்பதே மீதி படத்தின் கதை
படத்தின் விமர்சனம்
படத்தில் வழக்கம் போல விஷால் நடிப்பில் மிரட்டியுள்ளார்.படம் முழுவதும் விஷால் தான் தாங்கி செல்கிறார்.கதாநாயகியாக வரும் சுனைனா நடிப்பு ஓகே என்று சொல்லும் அளவிற்கு தான் உள்ளது.படத்தில் விஷால் ஒரு போலிஸ் அதிகாரி போலவே வாழ்ந்துள்ளார் என்று தான் கூறவேண்டும்,வில்லன் ரமணா மற்றும் அவரது தந்தையும் தங்களது நடிப்பினை சிறப்பாக நடித்துள்ளனர்,ஆனால் அதிகம் ரசிகர்களை கவரவில்லை.படத்தின் முதல் பாதி குடும்ப காட்சிகளை கொண்டு மெதுவாக நகர்ந்து செல்கிறது.இரண்டாவது பாதி முழுக்க முழுக்க அடிதடியில் தான் முடிந்துள்ளது.படத்தில் பல சண்டை காட்சிகள் வந்தாலும் அவை படத்திற்கு பலத்தினை அளிக்கவில்லை,காரணம் படத்தில் அதிக லாஜிக் மிஸ்டேக்.பல அடிகள்,கத்தி குத்துகள் வாங்கி விஷால் எதிரிகளை மீண்டும் திருப்பி அடிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.படத்தின் திரைக்கதையில் வேகம் குறைவு அது அதிகம் இருந்திருந்தால் இப்படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.யுவன் பாடல்கள் எடுபடவில்லை,அதற்கு பதிலாக பின்னணி இசை பட்டையை கிளப்பியுள்ளது.போலீஸ் கதாபாத்திரத்தினை இயக்குனர் நன்கு வடிவமைத்துள்ளார் என்பது மட்டும் படத்தினை பார்ப்பவர்களுக்கு ஆறுதல்.
லத்தி படத்திற்கு இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 2/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in