இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
நடிகர்,தயாரிப்பாளர் தமிழ் சினிமாவை கலக்குபவர் விஷால் மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.கடந்த முறை வெளியாகிய வாகை சூட வா படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.அதனை தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்,சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இன்று இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது
டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.போலீசாக விஷால் களம் இறங்கினால் போதும் அடித்துத்துவைத்து விடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே,அப்போ அதை பற்றி இப்படத்தில் கேட்கவா வேண்டும்,வழக்கம்போல தனது ஸ்டைலில் எதிரிகளை பந்தாடியுள்ளார்.ரசிகர்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த படப்பிடிப்பின் பொழுது விஷாலுக்கு 2 முறை பலத்த காயம் ஏற்பட்டுள்ளது,காயத்தினையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து படத்தினை முடித்துள்ளார்,இவரின் இந்த கடின முயற்சிக்கு இப்படம் பெரும் வெற்றியாக அமையும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்
Embed video credits : U1 RECORDS
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in