தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம்.இவர் நடிக்கும் படங்கள் தற்போது நூறு கோடிகளுக்கு மேல் தான் வசூல்களை செய்து வருகிறது
இதனாலேயே தயாரிப்பாளர்கள் தளபதி விஜயை வைத்து படம் எடுக்க வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படம் வெளியாகி உள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.தமன் இசையமைத்துள்ளார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதுவரை உலகம் முழுவதும் இப்படம் 210 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்க உள்ளார்.லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் வேளைகளில் பயங்கர பிசியாக உள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க உள்ளது, இப்படத்தில் நடிகர் அர்ஜுன், ப்ரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.கதாநாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு லியோ என லோகேஷ் பெயரிட்டுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவுக்கு பிறகு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது கேரளாவில் தான்.அங்கு இப்பொழுதே லியோ படத்திற்கு ரசிகர் காட்சி டிக்கெட்டுகள் அச்சடித்து விற்க தொடங்கி மேலும் அது அனைத்தும் விற்பனையாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
https://twitter.com/vijayfanstrends/status/1621485970226024448?s=46&t=JzeAZbW8BLWgujNtox7Pww
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in