நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் லிகர்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது காரணம் இப்படத்தில் நிஜ பாக்ஸர் மைக் டைசன் நடித்துள்ளார்.குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.இவர்களுடன் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார்.இப்படத்தினை தர்மா ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.இப்படம் அதிகாலை முதலே காட்சிகள் திரையிடப்பட்டு ரசிகர்கள் ஆரவாரமாக படத்தினை கண்டு வருகின்றனர்
படத்தின் கதை
மும்பையில் டீ கடை நடத்தி வருகிறார் விஜய் தேவர்கொண்டா,இவரின் அம்மா ரம்யாகிருஷ்ணன்.விஜய்க்கு சிறுவயதில் இருந்தே குத்து சண்டை வீரராக ஆக வேண்டும் என கனவு உள்ளது.அதற்காக ஒரு சண்டை பயிற்சி கூடத்தில் சேர்ந்து சண்டை கற்றுக்கொள்ள தொடங்குகிறார்.அங்கு தனது திறமையால் கோச்சை தனது பக்கம் திருப்புகிறார்.அதே சமயம் கதாநாயகி அனன்யாவுக்கு விஜயுடன் காதல் மலர்கிறது.மகன் காதலினால் அவன் லட்சியம் பாதிக்கப்படுமோ என ரம்யாகிருஷ்ணன் அஞ்சுகின்றார் .இந்நிலையில் அனன்யா பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்கிறார் விஜய்.அங்கு அவர் திக்கு வாய் என்ற உண்மை தெரியவரவே உடனே அனன்யா விஜயை கழட்டி விடுகிறார்.இதனால் விஜய் போட்டிகளில் முழு கவனத்தினையும் செலுத்தி வெற்றி பெறுகிறார்.மேலும் இன்டர்நேஷனல் சாம்பியன் ஆக வேண்டும் என கனவுடன் இருக்கும் விஜயின் கனவு நிறைவேறியதா,காதலியுடன் சேர்ந்தாரா என்பதே மீதி படத்தின் கதை
படத்தின் விமர்சனம்
படத்தில் விஜய் தேவர்கொண்டா தனது முழு பங்களிப்பையும் அளித்துள்ளார்.திக்குவாயாக பேசியதும்,உடலை பாக்ஸர் போல ஆக்கியதும் பெரும் பாராட்டுக்குரியது.அனன்யா பாண்டே நடிப்பு சரியாக படத்திற்கு எடுபடவில்லை என்று தான் கூறவேண்டும்,அதேபோல ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரத்திற்கு சரியான முக்கியத்துவத்தினை கொடுக்கவில்லை.படம் வேகமாக நகரும் இடத்தில் பாடல்காட்சிகளை வைத்து படத்தின் வேகத்தை குறைத்துள்ளது பெரும் சோகமே.சண்டை காட்சிகள் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது,அது மட்டுமே சிறப்பு என்று கூறலாம் அந்தளவிற்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.மைக் டைசன் என்ற குத்துசண்டை வீரரை இப்படத்தில் சரியாக உபயோகிக்கவில்லை,இறுதி கட்டத்தில் விஜய்க்கும் மைக் டைசனுக்கும் நடக்கும் சண்டையை பார்ப்பதற்கு தான் ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர் ஆனால் காட்சிகள் முறையாக வடிவமைக்கப்படாதது ஏமாற்றமே.இன்னும் நீண்ட நேரங்கள் மைக் டைசனை காண்பித்து சண்டைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையில் மாற்றம் செய்திருந்தால் இப்படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
LIGER-க்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – (2/5)
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in