தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.
விக்ரம் படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பினை உலகம் முழுவதும் பெற்று வசூல் சாதனையை படைத்தது வருகிறது.
ரசிகர்களின் பாராட்டு மழையில் இயக்குனர் லோகேஷ் மற்றும் உலகநாயகன் நனைந்து வருகின்றனர்.அந்தளவிற்கு ரசிகர்களின் மனதினை வெகுவாக கவர்ந்துள்ளது விக்ரம்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தளபதி விஜயை வைத்து அடுத்த படத்தினை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் லோகேஷ்,இந்நிலையில் அடுத்த படத்தின் வேலைகளை அண்மையில் தொடங்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.அதனால் சமூக வலைத்தளங்களுக்கு இடைவெளி விட போவதாகவும் அறிவித்திருந்தார்,
தற்போது லோகேஷ் கனகராஜ் படத்தின் வேலைகளை தொடங்கி உள்ளார்.அதன்படி தளபதி படத்தின் லொகேஷன் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.அதற்காக மும்பையில் விரார் பகுதியில் உள்ளார்.இந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது,இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர்.மேலும் ஏற்கனவே லோகேஷ் அறிவித்தது போல வாரிசு படம் வெளியாகிய பிறகு இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார்.அதற்குள் தனது பக்கத்தில் உள்ள படத்தின் பணிகளை முடிக்க தொடங்கியுள்ளார் லோகேஷ்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in