வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே செல்லும் லாஸ்லியா.. வெளியான அதிர்ச்சி தகவல் | BiggBoss Ultimate Wild Card

புதிதாக தொடங்கப்பட்ட BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். தமிழில் பிக்பாஸ் வெற்றிகரமாக ஐந்து சீசன்களை முடித்துவிட்டது. 5 சீசன்களையும் உலக நாயகன் கமலஹாசனே தொகுத்து வழங்கினார். தற்போது இந்த 5 சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். குறிப்பாக தமிழில் வெளியாகும் இந்த ரியாலிட்டி ஷோவிற்கு பல ரசிகர்கள் உண்டு. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 3 மணிநேர எபிசோடாக வாரம்தோறும் ஞாயிறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே செல்லும் லாஸ்லியா.. வெளியான அதிர்ச்சி தகவல் | BiggBoss Ultimate Wild Card 1

விளம்பரம்

BiggBoss Ultimate நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட ஓவியா மற்றும் பரணி கலந்து கொள்ளவில்லை இவர்கள் இருவரும் Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.  Youtube Video embed code credits: Disney + hotstar Tamil

BiggBoss Ultimate

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா மற்றும் பரணி ஆகிய இருவரும் கலந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால் சீசன் 3 போட்டியாளராக மக்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த வாரம் இரட்டை வெளியேற்றம் அல்லது 3 பேரை வெளியேற்றும் திட்டம் உள்ளதாகவும் தெரிகிறது. அப்படி பார்த்தால் தாடி பாலாஜி மற்றும் சினேகன் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண… Watch the below video…

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment