கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் உருவெடுத்தார் பிரதீப் ரங்கநாதன்.ஏஜிஎஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ்,யோகி பாபு , ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது
படத்தின் கதை :
கதாநாயகனாக வரும் பிரதீப் கதாநாயகி இவானா மீது காதல் கொள்கிறார்.இருவரும் காதலிக்கின்றனர். பிரதீப் முறையாக இவானா தந்தை சத்யராஜிடம் பெண் கேட்டு செல்கிறார்.அப்பொழுது சத்யராஜ் இருவரும் செல்போன்களையும் மாற்றி கொடுத்து ,இதற்கு பிறகு கழித்து வந்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முன்வந்தால் செய்து வைக்கிறேன் என கூறுகிறார்.அந்த ஒரு கட்டத்தில் தான் படத்தின் கதையே ஆரம்பிக்கின்றது. இருவரும் இந்த செல்போன்களால் பிரிகிறார்களா அல்லது சேருகிறார்களா,காதலியை எப்படி கரம் பிடிக்கிறார் பிரதீப் என்பதே மீதி படத்தின் கதை
படத்தின் விமர்சனம் :
படத்தில் கதாநாயகனாக வரும் இயக்குனர் பிரதீப் அனுபவ நடிப்பினை போல நடித்து அசத்தியுள்ளார்.இது இவருக்கு முதல் படம் என்று கூறினால் கட்டாயம் நம்புவது கடினமாக உள்ளது. நடப்பில் காதலில் நிலை எப்படி இருக்கிறது என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்து காண்பித்துள்ளார்.படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்,கதாநாயகி இவானா நடிப்பில் தனித்து விளங்கி இருக்கிறார்.அப்பாவாக வரும் சத்யராஜ் நடிப்பினை பற்றி கேட்கவா வேண்டும் பிரித்து மேய்ந்துள்ளார். யுவன் பாடல்கள் சுமாரான வரவேற்பினை பெற்றுள்ளது பின்னணி இசையில் புது புது இசையை போட்டு இளைஞர்களை கவர்ந்திருக்கிறார் யுவன் என்று தான் கூற வேண்டும்.யோகி பாபு தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் சிறந்து விளங்கி இருக்கிறார்.பிரதீப் நண்பர்களாக படகில் நடித்த கதிர் காமெடி பல இடங்களில் ஒர்கவுட் ஆகியுள்ளது.படத்திற்கு எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.படத்தில் குறை என்று சொல்வதற்கு லாஜிக் மிஸ்டேக்குகள் மட்டும் தான் மத்தபடி படம் நண்பர்களுடன் என்ஜாய் செய்து பார்க்க சிறந்த படம்
LOVE TODAY படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் அளிக்கும் ரேட்டிங்- 2.5/5
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in