The Indian Times

நாடு முழுவதும் முழு ஊரடங்கு ! மலேசிய அரசாங்கம் அதிரடி முடிவு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிரது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும் 2 கோடிக்கும் மேல் மக்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 17 கோடிக்கு மேல் மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் தெற்கு ஆசியா நாடுகளில் தான் கொரோனா தோற்று அதிகமாக பரவி வருகிறது. அதிலும் மலேசியா , வியட்நாம் , தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா தோற்று மிகவும் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதிலும் கொரோனாவின் இரண்டாவது அலை மலேசியாவில் மட்டும் சுமார் 2000 திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளது.

Advertisement

அதிலும் கடந்த மே மாதத்தில் இருந்து தான் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் மலேசியாவிலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. மலேசியா போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளதால் ரமலான் பண்டிகை அங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அந்த நேரங்களில் கொரோன பரவல் அதிகம் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறுகின்றனர். இதனால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டுவருவதாக மலேசிய அரசம்ங்கம் அறிவித்துள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in