பேட்டியின் நடுவே தொகுப்பாளரை அடிக்க பாய்ந்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமாவை 90களில் மிரட்டிய பிரபல வில்லன் மன்சூர் அலிகான்.எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்யக்கூடியவர் இவர்.சுபயாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகர் மன்சூர் அலிகான்.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய வேலை கிடைச்சிருச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இவரது நடிப்பு தனி கவனத்தினை மக்களிடம் பெறவே நடிகர் விஜயகாந்த் நடிக்கும் கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி வீரபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இதனை தொடர்ந்து வில்லனாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.

பேட்டியின் நடுவே தொகுப்பாளரை அடிக்க பாய்ந்த மன்சூர் அலிகான் 1

விளம்பரம்

தற்போது காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.மேலும் மலையாளம் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் மன்சூர் அலிகான்.இவர் அடிக்கடி செய்யும் குறும்புத்தனமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வந்தது.இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மிகவும் பிடித்த நடிகர் மன்சூர் அலிகான்.அவரது இயற்கையான வில்லன் கலந்த குறும்பு செயல்கள் இவரது ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.லோகேஷ் இயக்கிய கைதி படத்தின் கதை முதலில் மன்சூர் அலிகானுக்காக உருவாக்கப்பட்டது தான் பின்னர் அவர் நடிக்க முடியாமல் போகவே படம் கார்த்திக்கு சென்றுள்ளது.இவர் பேட்டிகளின் பொழுது அடிக்கடி செய்யும் குறும்புத்தனமான விஷயங்கள் இணையத்தில் அதிகளவு வைரலாவது உண்டு.

பேட்டியின் நடுவே தொகுப்பாளரை அடிக்க பாய்ந்த மன்சூர் அலிகான் 2

விளம்பரம்

பிரபல தொகுப்பாளர் பாஸ்கி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் உடன் ஏற்பட்ட அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.ஒருமுறை மன்சூர் அலிகானை பேட்டி எடுத்துள்ளார் பாஸ்கி,அப்பொழுது அவரிடம் ஏடாகூடமாக கேள்விகளை தொடர்ந்து கேட்டுள்ளார்.இதனால் கடுப்பாகிய மன்சூர் அலிகான் பாஸ்கியை நிகழ்ச்சியில் அடிக்கவே போயுள்ளார்.பாஸ்கி இவ்வாறு கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மன்சூர் அலிகான் எப்பொழுதும் இயல்பாக வெளிப்படை தன்மையுடன் பேசக்கூடியவர்.இவர் இவ்வாறு கோவப்பட்டுள்ளாரா என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment