இன்னும் 12 நாட்களில் நடிகை மீனா திருமண நாள்….வைரலாகும் கடந்த ஆண்டு மீனா பதிவிட்ட திருமண நாள் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கலக்கியவர் மீனா.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.தமிழில் இவருக்கு என் ராசாவின் மனசிலே படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றுத்தந்தது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகி,குணசித்திர நடிகை என சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருபவர் மீனா.அண்மையில் பல நாட்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.நடிகர் ரஜினிகாந்துடன் குழந்தையில் இருந்து நடித்து வருபவர் மீனா.இவர்கள் கூட்டணியில் உருவாகிய படங்கள் அனைத்தும் வெற்றியை மட்டும் தான் இவர்களுக்கு அளித்துள்ளது.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளத்திலும் சினிமா உலகை ஒரு கலக்கு கலக்கியவர் ஆவார்.

இன்னும் 12 நாட்களில் நடிகை மீனா திருமண நாள்....வைரலாகும் கடந்த ஆண்டு மீனா பதிவிட்ட திருமண நாள் பதிவு 1

விளம்பரம்

இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி அசத்திவிட்டார்.மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு இயற்கை எய்தினார்.இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கும் திரை உலகிற்கும் அளித்தது.பெண் பிள்ளையுடன் கணவர் இல்லாமல் மீனா என்ன செய்வார் என்று அனைவரும் மீனாவின் மேல் பரிதாப பட தொடங்கினர்

இன்னும் 12 நாட்களில் நடிகை மீனா திருமண நாள்....வைரலாகும் கடந்த ஆண்டு மீனா பதிவிட்ட திருமண நாள் பதிவு 2

விளம்பரம்

நேற்று இவரது கணவருடன் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது.நடிகை மீனாவிற்கு வித்யாசாகருக்கும் திருமணம் ஜூலை 12 2009 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இவர்கள் திருமண நாளுக்கு 12 நாட்களே இன்னும் இருந்த நிலையில் மீனாவின் கணவர் இயற்கை எய்தினார்.இது பெரும் சோகத்தினை அளித்துள்ளது.கடந்த ஆண்டு மீனா தனது காதல் கணவருக்கு கல்யாண நாள் வாழ்த்துக்களை கூறிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது,அதில் அவர் கூறியதாவது ,வானவில் போல என் வாழ்வில் வந்து சேர்ந்து அதை அழகாக வண்ணமயமாக்கி விட்டாய், நீ எனக்கு அளித்த புன்னகையை எப்போதும் அணிந்துகொள்வதற்கான அற்புதமான மற்றும் எனக்கு பிடித்த இடம் என்று கணவர் வித்யாசாகருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

இன்னும் 12 நாட்களில் நடிகை மீனா திருமண நாள்....வைரலாகும் கடந்த ஆண்டு மீனா பதிவிட்ட திருமண நாள் பதிவு 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment