கடைசி பாலில் 2 ரன்கள் | Verithanama Match வீடியோ இதோ!

ஐ.பி.எல் தொடர் கோலாகலமாக தொடங்கியது. ரசிகர்கள் இல்லாமல் நடந்தாலும் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இல்லை. இன்றைய போட்டியில் டேபிள் டாப்பராக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , 4 வது இடத்தில இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. எப்போதும் சென்னை , மும்பை மேட்ச் என்றால் அதில் பரப்பரப்பிற்கு பஞ்சம் இருக்காது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய சென்னை அணி வீரர் ருத்ராஜ் கைகுவார்ட் 4 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து சென்றார். அதன் பின்னர் களம் இறங்கிய டுப்லெஸி மற்றும் மோயீன் அலி இருவரும் partnership போட்டு அரைசதம் அடித்தனர். இருவரும் ஆட்டமிழந்து செல்ல மீண்டும் ஒரு வலுவான பார்ட்னெர்ஷிப் அமைத்தனர் ஜடேஜா மற்றும் ராயுடு. ராயுடு 72 ரன்கள் அடித்து விளாசி இறுதியாக சென்னை அணி 218 ரன்கள் அடித்தனர். 219 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி வீரர்கள் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

கடைசி பாலில் 2 ரன்கள் | Verithanama Match வீடியோ இதோ! 1முதலில் களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் டி காக் partnership போட்டு அணிக்கு சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அவர்கள் இருவரும் 38 , 35 ரன்களுக்கு ஆட்டமிழந்து செல்ல, அதன் பின்னர் களமிரங்கிய பொலார்டு மற்றும் க்ருனால் பாண்டியா வலுவான கூட்டணி அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். க்ருனால் பாண்டியா 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க. பொலார்டு இறுதி வரை விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக 1 பந்தில் 2 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பொலார்டு 34 பந்துகளில் 87 ரன்களை குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை த்ரில் வெற்றி பெற செய்தார். Video Credits – Code emeded Via IPL T20 official Website Thanks BCCI & Vivo IPL T20 for the Video Code – Watch Pollard Batting Till Last Ball Below 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment