மோயின் அலியின் கோரிக்கையை ஏற்ற csk நிர்வாகம்!

உலகின் மிக சிறந்த டி 20 தொடர் என்றால் அது ஐ.பி.எல் தொடர் தான். கடந்த 2020 ஐ.பி.எல் தொடர் துபாயில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இதனால் கடந்த 2014 க்கு பிறகு தற்போது ஐ.பி.எல் தொடரின் மதிப்பு சரிந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஐ.பி.எல் லை திருவிழா போல் ரசித்து பார்த்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா தோற்று பாதிப்பால் ஐ.பி.எல் தொடருக்கு இந்தியாவில் தடை விதிக்க செய்தது. பின்னர் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடியாக காணப்படும் மைதானங்களை பார்க்கும்போது ரசிகர்களை மிகவும் சோகத்திற்குள்ளாகக்கியது.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா

மோயின் அலியின் கோரிக்கையை ஏற்ற csk நிர்வாகம்! 1

விளம்பரம்

தற்போது 2021 ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெற போகிறது என்றாலும் ஆரம்பத்தில் சில போட்டிகளுக்கு ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்று பல கட்டுப்பாடுகளுடனே நடக்க இருக்கிறது. ஐ.பி.எல் யில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். தல தோனி இந்த அணியில் இருப்பதாலேயே இந்த அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உலகமெங்கும் உள்ளானர். மூண்டு முறை ஐ.பி.எல் தொடரை கைப்பற்றி இருக்கும் இந்த அணி கடந்த 2020 ஐ.பி.எல் தொடரில் சரியாக பெர்பார்ம் செய்யவில்லை.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண புகைப்படங்கள்

மோயின் அலியின் கோரிக்கையை ஏற்ற csk நிர்வாகம்! 2

விளம்பரம்

அந்த தவறை இந்த வருடம் செய்து விட கூடாது என்பதற்காக உத்தப்பா , கிருஷ்ணப்ப கவுதம் , மோயின் அலி , புஜாரா ஆகிய வீரர்களை தேர்வு செய்துள்ளது சென்னை அணி. இதில் இங்கிலாந்து அணியை சேர்ந்த மோயின் அலி தனது ஜெர்ஸியில் உள்ள தன் மதத்திற்கு எதிரான மதுபானத்தின் ஸ்பான்சர் லோகோவை நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதை சென்னை அணி ஏற்றுக்கொண்டு அந்த லோகோவை நீக்கியுள்ளது. இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment