பெண் பாதுகாப்பு பத்தி பேசுற நீங்க.. ஏன் ITEM SONG வச்சீங்க… மோகன் ஜியை கேள்விகளால் போட்டு தாக்கிய ஐயப்பன்

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் மோகன்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய திரௌபதி ,ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.மேலும் பெரும் விமர்சனங்களும் இப்படங்களுக்கு கிளம்பியது. இப்படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மோகன் ,இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடராஜனை வைத்து பகாசூரன் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பெண் பாதுகாப்பு பத்தி பேசுற நீங்க.. ஏன் ITEM SONG வச்சீங்க... மோகன் ஜியை கேள்விகளால் போட்டு தாக்கிய ஐயப்பன் 1

விளம்பரம்

இப்படத்தினை ஜி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது.சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் இவர்களுடன் நடிகர் ராதா ரவி,ராஜன்,சரவணன் சுப்பையா,குணநிதி ,மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் படத்திற்கு பிறகு முழுவதுமாக வில்லத்தனமான நடிப்பினை இப்படத்தில் காட்டியுள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 17 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது

பெண் பாதுகாப்பு பத்தி பேசுற நீங்க.. ஏன் ITEM SONG வச்சீங்க... மோகன் ஜியை கேள்விகளால் போட்டு தாக்கிய ஐயப்பன் 2

விளம்பரம்

தற்போது பிரபல தொகுப்பாளர் மோகன் ஜியை பேட்டி எடுத்துள்ளார்.இந்த பேட்டியில் படத்தில் பெண் பாதுகாப்பு பற்றி பேசும் நீங்கள் ஏன் ஐட்டம் பாடலை வைத்து இருக்குறீர்கள்,எப்பொழுதுமே உங்களது படத்தில் காதலை கொச்சையாக காண்பிக்கிறீர்களே ஏன், இட ஒதுக்கீடை பற்றி ஏன் நீங்கள் உங்கள் படத்தில் பேசவில்லை,ஒருவன் ஏன் தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ள கூடாது என கேள்வி மேல் கேள்விகளை அடுக்கி இயக்குனர் மோகன் ஜியை திக்குமுக்காட செய்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed video credits : NEWSGLITZ

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment