நல்ல நடிகர் நல்ல மனிதர் தேடி சென்று வேண்டுபவர்களுக்கு உதவி செய்பவர் மயில்சாமி.இவரின் நகைச்சுவை இன்று வரை பலரையும் சிரிக்க வைத்து வருகிறது.அந்தளவு தனது நடிப்பினால் மக்களை அதிகம் கவர்ந்திழுத்தவர் மயில்சாமி.பிறருக்கு பிரச்னை என்றால் முதல் ஆளாக ஓடி நன்மை செய்பவர் இவர்.சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார்,இவர் நடிகர் மட்டுமில்லை நல்ல கலைஞனும் கூட,மிமிக்ரியில் அசத்தும் ஒரு மகா கலைஞன் மயில்சாமி என்று கூறினால் மிகையாகாது.தற்போதும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயில்சாமி இன்று நெஞ்சு வழியால் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.இன்று அதிகாலை 3:30 மணிக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார்,அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இந்த செய்தி தமிழ் சினிமா நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை அளித்துள்ளது.பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மயில்சாமி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவரது மறைவிற்கு இவரது நண்பரும் திரைப்பட நடிகரும் ஆன எம் எஸ் பாஸ்கர் வருகை தந்துள்ளார்.மயில்சாமியின் உடலை பார்த்து டேய் மயிலு இப்படி எங்களை விட்டுட்டு போயிட்டியேடா என கதறி கூப்பாடு போட்டு அழுதுள்ளார்.இது பார்ப்பவர்களுக்கும் கண்ணீரை வரவழைத்துள்ளது,எம் எஸ் பாஸ்கர் எவ்வளவு பாசம் இருந்தால் மயிலசாமி உடலை பார்த்து இப்படி கத்தி அழுத்திருப்பார் என்பது வீடியோவை பார்க்கும் பொழுது உணரமுடிகிறது.ரசிகர்களும் மயில்சாமிக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Embed video credits : POLIMER NEWS
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in