முடியெல்லாம் திருத்தி இசைவெளியீட்டு விழாவுக்கு DECENT-ஆ வந்திருக்கலாமே… விஜயை விமர்சித்த பிரபல இசையமைப்பாளர்

தளபதி விஜய் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்.இவர் நடிக்கும் படங்கள் கோடிகளில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.இதனாலேயே இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்துக்கிடக்கின்றனர்.தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.தில் ராஜு இப்படத்தினை தயாரித்துள்ளார் ,தமன் இசையமைத்துள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர்.

முடியெல்லாம் திருத்தி இசைவெளியீட்டு விழாவுக்கு DECENT-ஆ வந்திருக்கலாமே... விஜயை விமர்சித்த பிரபல இசையமைப்பாளர் 1

விளம்பரம்

அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இசைவெளியீட்டு விழாவை கண்டு களித்தனர்.மேலும் படம் குறித்து நிறைய தகவல்களை படக்குழு அறிவித்துள்ளது,பின்னர் பேசிய தளபதி விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது அதிலும் குறிப்பாக அவர் இந்த முறை கூறிய குட்டி ஸ்டோரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் நிகழ்ச்சியில் தளபதி விஜய் எடுத்த செல்பி பெரும் வைரலாகி வருகிறது.

முடியெல்லாம் திருத்தி இசைவெளியீட்டு விழாவுக்கு DECENT-ஆ வந்திருக்கலாமே... விஜயை விமர்சித்த பிரபல இசையமைப்பாளர் 2

விளம்பரம்

இந்நிகழ்ச்சி நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது,இதனை பார்த்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ,வாரிசு இசைவெளியீட்டு விழா பார்த்தேன் மனதிற்கு நெருடலாக உள்ளது,விஜய் தலை முடியை சீர்படுத்தி,தாடியை குறைத்து,நிகழ்ச்சிக்கேற்ற ஆடம்பர உடையில் வந்திருக்கலாமே,எளிமை என அவரும் அவர் ரசிகர்களும் நினைக்கலாம் ஆனால் அவர் பிரம்மாண்டமாக வருவது தான் அவரது ரசிகர்களுக்கு பிடிக்கும்.நாயகனை வெறித்தனமாக பின்பற்றும் ரசிகர்களுக்கு எல்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் இளைஞர்கள் உயிர்மூச்சாக உள்ளனர்,எனவே இத்துறையில் உள்ளவர்களுக்கு சில பொறுப்புகள் உள்ளனர்,நீங்கள் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் என கூறியுள்ளார்.விஜயை இவ்வாறு ஜேம்ஸ் விமர்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முடியெல்லாம் திருத்தி இசைவெளியீட்டு விழாவுக்கு DECENT-ஆ வந்திருக்கலாமே... விஜயை விமர்சித்த பிரபல இசையமைப்பாளர் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment