ஒரே ஆளாக 1960களில் மக்களை சிரிக்க வைத்தவர் நாகேஷ்.இவரின் நடிப்பு மற்றும் நகைச்சுவை என இரண்டிற்கும் இன்று வரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் முதல்முதலாக 1961 ஆம் ஆண்டு தாயில்லா பிள்ளை என்ற படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகினார்.அன்று முதல் அவர் மறையும் வரையில் சினிமாவை தான் முழு மூச்சாக காதலித்து வந்தார் நாகேஷ்
எம்ஜிஆர் சிவாஜி முத்துராமன் என பல நடிகர்களின் படங்களிலும் இவர் நடித்துள்ளார்,அதுமட்டுமின்றி கமல்ஹாசன் ,மாதவன் என தமிழ் சினிமாவின் இரண்டு தசாப்த நடிகர்களுடனும் நடித்து விட்டார் நாகேஷ்.
இவர் தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம் ,தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.தனது உடல் மொழியால் அனைவரையும் சிரிக்க வைத்து அசத்துபவர்.
ஆரம்பத்தில் காமெடியனாக நடிக்க தொடங்கிய நாகேஷ் ஒரு காலகட்டத்தில் கதையின் நாயகனாகவும் நடிக்க தொடங்கிவிட்டார்.அவ்வாறு இவர் நடித்த சர்வர் சுந்தரம் மற்றும் எதிர்நீச்சல் படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது.
வாலி பாடல்வரிகளில் உருவாகி எம்எஸ்வி இசையில் உருவாகிய அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.
இவ்வாறு தான் வாழும் பொழுதே நடிப்பிற்கு ஒரு உதாரணமாகவே வாழ்ந்துள்ளார்.
பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.இவர் நடித்த பட்டணத்தில் பூதம் திரைப்படத்தினை கண்டு இன்றுவரை சிரிக்கும் ரசிகர்கள் உண்டு.அந்தளவிற்கு நாகேஷ் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்
இவர் ரெஜினா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்,இவரின் மகன் தான் நடிகர் ஆனந்த் பாபு ,சிறந்த டான்சர். இவரும் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.ஆனால் எந்த படமும் இவருக்கு தந்தையை போல வரவேற்பினை பெற்று தரவில்லை
தற்போது நடிகர் நாகேஷின் குடும்பம் மற்றும் சினிமா துறையில் அவர் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இதனை ரசிகர்கள் ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in