வடிவேலு தமிழ் சினிமாவை கலக்கி வரும் புயல் .இதனாலேயே இவருக்கு என்னமோ வைகைப்புயல் என பெயர் வைத்துள்ளார்கள் போல.இவரின் நகைச்சுவையை பார்த்தால் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் ஓடிவிடும்.பல மக்களின் கவலையை போக்கிய வைத்தியர் இந்த வடிவேலு என்று கூறினால் மிகையாகாது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காமெடியன் கதாநாயகன் என இரண்டிலும் சினிமாவை ஆட்டம் காண வைத்தவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.பல ரசிகைகளின் மனக்கவலையை போக்கிய மருத்துவர் இவர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைக்கா நிறுவன தயாரிப்பில் நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் எதிர்பார்ப்பினையும் எகிற செய்துள்ளது,ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் வடிவேலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed video credits :SUNTV
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in