The Indian Times

முதல்ல இங்கிலாந்துக்கு எதிரா அப்பறம் உலக கோப்பை – நம்ம நடராஜனுக்கு கிடைத்த சரியான வாய்ப்புகள்

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. முதல் முதலில் சற்று தடுமாறி இருந்தாலும் இரண்டாவது போட்டியில் விட்டு கொடுக்காமல் வெற்றியை உறுதி செய்தது. இதில் ரோஹித் மற்றும் அஷ்வின் அடித்த சதம் அணியை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றது. அக்ஷர் மற்றும் அஷ்வின் கைப்பற்றிய 5 விக்கெட் இன்றியமையாதவை.

Advertisement

இந்த நிலையில் தற்போது மூன்றாவது தொடர் தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து டி 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு நட்ராஜன் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனென்றால் இதில் பும்ராவிற்கு ஓய்வு அளிப்பதகா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து டி 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நட்ராஜன் விளையாட கோலி பரிந்துரை செய்துள்ளார்.

புவனேஸ்வர் மற்றும் சைனி ஒருநாள் போட்டியில் விளையாடுவர். சைனி நம்பி விளையாட வாய்ப்பு குறைவு என்றும் அவருக்கு எப்போது வேண்டுமாலும் காயம் அடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் பும்ரா இரண்டு ஃபார்மட்டில் விளையாடுவது போல நட்ராஜன் மட்டும் தான் விளையாடுவார் என்று விளக்கம் அளித்துள்ளார்.


இதையடுத்து உலக கோப்பை டி20 போட்டியில் நட்ராஜன் விளையாட வாய்ப்பு அளிக்க உள்ளதாகவும், அதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அவருக்கு அமையும் என்றும் அவர் கூறினார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in