தமிழகம் முழுவதும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது என கூறி இரண்டு நாட்கள் முன்னர் விக்னேஷ் சிவன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று அவர் கல்யாணம் நடப்பதினை உறுதி செய்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா 1

விளம்பரம்

விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இந்து முறைப்படி திருமணம் செய்து உள்ளனர்.
இவர்களது திருமணம் திருப்பதியில் நடக்கும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு திருமணம் சென்னை மகாபலிபுரம் அருகே sheration grand விடுதியில் மிகவும் நெருங்கிய உறவினர்களுடன் மட்டுமே நடைபெறுகின்றது.மேலும் இவர்களது திருமணம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதுபல சினிமா நட்சத்திரங்களும் இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா 2

விளம்பரம்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களது திருமணத்தினை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் வித விதமாக மதிய உணவினை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.இதனை கேள்விப்பட்ட அவர்களது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கு தங்களது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவர்கள் திருமணம் முடிந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed video credits : polimer tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment