சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் எப்பொழுது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
திருமண வீடியோ முழுவதும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதால் பத்திரிகையாளர்கள் யாரும் திருமணத்தில் அனுமதிக்கப்படவில்லை மேலும் கலந்துகொள்பவர்கள் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.இவர்களது திருமணத்தில் பாதுகாப்பிற்காக 80 பவுன்சர்கள் மற்றும் போலீஸ்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.மேலும் பத்திரிகைகளில் உள்ள கியூ ஆர் கோடுகள் மூலம் தான் அனைவரையும் உள்ளே அனுமதித்தனர்.இவ்வாறு பெரும் கட்டுப்பாடுகளுடன் இவர்கள் திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமண வீடியோவிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணம் முடிந்த அடுத்த நாள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு திருமணத்திற்காக சென்று விட்டனர்.
தற்போது அங்கிருந்து இருவரும் வெளிநாட்டிற்கு ஹனிமூன் காக சென்றுள்ளனர்.விமான நிலையத்தில் விக்னேஷ் சிவன் கைகளை இறுக்கப்பிடித்துக்கொண்டு நடந்து வந்துள்ள,அப்பொழுது அங்கு இருந்த ரசிகர் ஒருவர் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அதற்கு திரும்பி நயன்தாராவும் நன்றி என தெரிவித்துள்ளார்.மேலும் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்கலாமா என கேட்டதற்கு நேரம் ஆகிவிட்டது என கூறி சென்றுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in