நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ…ஒப்பந்தத்தினை ரத்து செய்த NETFLIX ?

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் எப்பொழுது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ...ஒப்பந்தத்தினை ரத்து செய்த NETFLIX ? 1

விளம்பரம்

திருமண வீடியோ முழுவதும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதால் பத்திரிகையாளர்கள் யாரும் திருமணத்தில் அனுமதிக்கப்படவில்லை மேலும் கலந்துகொள்பவர்கள் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.இவர்களது திருமணத்தில் பாதுகாப்பிற்காக 80 பவுன்சர்கள் மற்றும் போலீஸ்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.மேலும் பத்திரிகைகளில் உள்ள கியூ ஆர் கோடுகள் மூலம் தான் அனைவரையும் உள்ளே அனுமதித்தனர்.இவ்வாறு பெரும் கட்டுப்பாடுகளுடன் இவர்கள் திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமண வீடியோவிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ...ஒப்பந்தத்தினை ரத்து செய்த NETFLIX ? 2

விளம்பரம்

இந்நிலையில் திருமண வீடியோவை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் செய்த 25 கோடி ரூபாய் ஒப்பந்தத்தினை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்யாணத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியே சென்றுவிட கூடாது என மிகவும் கவனமான வேலையாட்களுக்கு அனுமதிகொடுக்காமல் பலத்த பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது.தற்போது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளதால் ,விதிமுறைகளை மீறியதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய் ஒப்பந்தத்தினை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து அறிந்த ரசிகர்கள் ,இதற்கு உங்களை பெரிய ஆட்கள் ஆக்கிய தமிழ்நாடு மக்கள் முன்பு டெலிகாஸ்ட் செய்து கல்யாணம் செய்து அவங்க ஆசிர்வாதத்தினை பெற்றிருக்கலாம் என தெரிவித்து வருகின்றனர்.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

விளம்பரம்

Embed video credits : Polimer news

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment