பெரிய தடைகளுக்கு பிறகு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் நெல்சன் திலீப்குமார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார்.மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து இயக்குவதில் வல்லவர் என்று ரசிகர்களிடமே நல்ல பெயரினை பெற்றவர்.முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற வெற்றிப்படத்தினை கொடுத்தார் நெல்சன்.இப்படம் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் தான் சன் பிக்சர் தயாரிப்பில் தளபதி விஜயை வைத்து இயக்க வாய்ப்பு நெல்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது.இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே,விடிவி கணேஷ்,அபர்ணா தாஸ், செல்வராகவன், என பெரும் நடிகர்கள் கூட்டமே நடித்தது.பல கோடிகளில் மால் போன்ற செட்டப்புகள் அமைக்கப்பட்டு பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியது.கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தினை தொடர்ந்து இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை விஜய் ரசிகர்கள் வைத்திருந்தனர்.இருந்தாலும் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் இன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பினை உலகம் முழுவதும் பெற்றது.காட்சிகள் காணாமல் திரையரங்குகள் நடு இரவில் கூட காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.மக்கள் வெள்ளத்தில் விக்ரம் நீந்தி வருகிறது.இந்நிலையில் லோகேஷ் கனகராஜை வாழ்த்தி வரும் ரசிகர்கள் நெல்சன் திலீப்குமாரை கலாய்க்க தொடங்கிவிட்டனர்.நெல்சனை பீஸ்ட் தோல்வியை வைத்து பங்கமாக இணையத்தில் மீம்ஸ்களை உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.இந்த மீம்ஸ்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in