“கொலைகாரியே இருக்கியேடி” முட்டை உடைப்பதில் வெளிப்பட்ட இசைவாணியின் வன்மத்தால் புலம்பும் தாமரை செல்வி! Bigg Boss Promo 1

ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குழாயடி சண்டை தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்! சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணியாக பிரிந்து குடுமி பிடி சண்டை போடுவது வெளியே இருந்து காண்பவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது என்றே தான் கூற வேண்டும்! அவ்வாறு மக்கள் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருப்பவர்களை சண்டை போடும் நேரத்தில் ரசித்து பார்த்தாலும், நியாயமாக விளையாடும் ஒருவரையே இறுதியில் வாக்குப்பதிவு மூலம் தேர்வு செய்வார்கள் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான்!

கட்டாயம் படிக்கவும்  நீ என்கிட்ட இதெல்லாம் சொல்ல கூடாது..ஜாக்லினை எச்சரித்த பவித்ரா.. வெடித்த முதல் சண்டை.. பிக் பாஸ் ப்ரோமோ இதோ..

"கொலைகாரியே இருக்கியேடி" முட்டை உடைப்பதில் வெளிப்பட்ட இசைவாணியின் வன்மத்தால் புலம்பும் தாமரை செல்வி! Bigg Boss Promo 1 1

விளம்பரம்

வித விதமாக சண்டை போடும் தாமரை, கொளுத்தி போடும் அண்ணாச்சி, மாறி மாறி பேசும் பாவனி, பேசியே கொல்லும் பிரியங்கா, முகத்திரையை கிழிக்காமல் விளையாடும் ராஜு,சிபி,வருண், விளையாடாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கும் அபிநய் மற்றும் இன்னும் பலரை சொல்லி கொண்டே போகலாம்! தீபாவளி திருநாளில் எப்படி கூடி மகிழ்ந்து ஆடி பாடி இருந்தனரோ அதற்கு நேர்மாறாக அடுத்த நாளில் பால் கரக்கும் போட்டி வைத்து போட்டியாளர்களின் அன்புக்கு பால் ஊத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்! வேடிக்கையாக செல்லும் பிக் பாஸ் வீட்டில் இன்னும் எத்தனை சண்டைகள் வரப்போகிறது என்று நாம் பொருத்து இருந்து தான் காண வேண்டும்! விறுவிறுப்பாக செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது! அதை தற்பொழுது நீங்களும் கண்டு மகிழுங்கள்! Watch The Video Below!…

கட்டாயம் படிக்கவும்  ஜாக்லினுக்கு சம்பவம் செய்த ரவீந்தர்.. ஜாக்லினை நம்பி பட்டினி கிடைக்கும் பெண்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment