ஓவியாவும், தாமரையும் வராங்களா இல்லையா?? என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும்??

24 மணி நேரமும் ஒளிபரப்பு ஆகும் வண்ணம் பிக் பாஸ் அல்டிமேட் கோலாகலமாக தொடங்க இருக்கு.பிக் பாஸ் தமிழ் தொடரின் முந்தைய சீசன்களில் போட்டியிட்டவர்கள், பிக் பாஸ் அல்டிமேட் டிஜிட்டல் பதிப்பின் முதல் சீசனில் மீண்டும் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள். 1 முதல் 5வது சீசன் வரையிலான போட்டியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள், வெற்றி பெற்றவர்கள் இந்தப் பதிப்பில் பங்கேற்க முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பிக் பாஸ் ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளது. இந்த ஐந்து சீசன்களுக்கும் கமல்ஹாசனே தொகுப்பாளராகத் தொடர்ந்தார். முதல் சீசன் 25 ஜூன் 2017 அன்று தொடங்கியது, சமீபத்தில் முடிவடைந்த ஐந்தாவது சீசன் 3 அக்டோபர் 2021 அன்று தொடங்கி ஜனவரி 16, 2022 நிறைவடைந்தது.

ஓவியாவும், தாமரையும் வராங்களா இல்லையா?? என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும்?? 1

விளம்பரம்

நாளை தொடங்க இருக்க பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி மற்றும் அனிதா சம்பத். சீசன் 1ல் கலந்து கொண்ட ஓவியா மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர். ஓவியா ஆர்மி என்ற ஒரு கலாச்சாரமே இவருனால உருவாக்கப்பட்டது. ஆரவ் கூட ஏற்பட்ட காதல் முறிவால் அப்போ அவங்க நீச்சல் குளத்துல விழுந்து தற்கொலை முயற்சி செய்தாங்க. அதுனால வெளியே அனுப்பப்பட்ட ஓவியா பிக் பாஸ் அல்டிமேட்-ல் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. Youtube Video embed code credits: Connecting

ஓவியாவும், தாமரையும் வராங்களா இல்லையா?? என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும்?? 2

விளம்பரம்

ஆனா ஓவியாக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவலும் தீயா பரவிட்டு இருக்கு. இதே போல அடித்தட்டு மக்களில் ஒருவராக உள்ளே போன நாடக கலைஞர் தாமரையும் இந்த நிகழ்ச்சில கலந்து கொள்ள மாட்டாங்க என்ற அதிகாரபூர்வமற்ற தகவலும் வருது. ப்ரோமோலையும் இவங்க ரெண்டு பேரையும் காட்டவே இல்லை. இது அதிகாரபூர்வமற்ற தகவல் தான் என்றாலும் நாளைக்கு மாலை 6.30 மணிக்கு இது எல்லாத்துக்கும் விடை தெரிஞ்சிடும்.. Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment