எந்திரன் 2.0 க்கு பிறகு தமிழில் 3Dயில் வெளியாக இருக்கும் பா ரஞ்சித்தின் புதிய படம்

அட்டகத்தி படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் பா.ரஞ்சித்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனர் ஆக அவதாரம் எடுத்தார்.பா ரஞ்சித் படம் என்றாலே நிச்சயம் நல்ல கதைக்களத்துடன் மக்களை மகிழ்விக்கும் வண்ணம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அட்டகத்தி படத்தினை தொடர்ந்து மெட்ராஸ் படத்தினை இயக்கினார்.இதில் நடிகர் கார்த்தி மற்றும் கலையரசன் நடித்து அசத்தி இருந்தனர்.இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.

எந்திரன் 2.0 க்கு பிறகு தமிழில் 3Dயில் வெளியாக இருக்கும் பா ரஞ்சித்தின் புதிய படம் 1

விளம்பரம்

படத்தின் வெற்றிகளை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தினை வைத்து கபாலி மற்றும் காலா என்று வரிசையாக இரண்டு படங்களை இயக்கினார்.இயக்குனர் ஆக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.அண்மையில் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நேரிடையாக வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து இவர் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரமை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்.

எந்திரன் 2.0 க்கு பிறகு தமிழில் 3Dயில் வெளியாக இருக்கும் பா ரஞ்சித்தின் புதிய படம் 2

விளம்பரம்

இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகியது.இந்நிலையில் இப்படத்தினை பா ரஞ்சித் 3 டியில் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழில் எந்திரன் 2.0 படத்திற்கு பிறகு 3டியில் உருவாக இருக்கும் படம் இது என்பதால் மேலும் இதில் விக்ரம் நடிப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.விரைவில் படத்தைப் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தினை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனை பா ரஞ்சித் இயக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க ஆசை இருப்பதாக அறிவித்திருந்தார் பா ரஞ்சித்.இதனால் இவர்கள் கூட்டணியும் விரைவில் இணையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்

எந்திரன் 2.0 க்கு பிறகு தமிழில் 3Dயில் வெளியாக இருக்கும் பா ரஞ்சித்தின் புதிய படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment